மாமன்னர் பூலித்தேவர் மக்கள் நல இயக்க அறிக்கை

சமுதாய உணர்வு!சொல்லில் உண்மை!!செயலில் தியாகம்!!!

என் அன்பிற்கினிய உறவுகள் அனைவருக்கும் என் அன்பான வணக்கம்…
கோவில்பட்டி நகராட்சி பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் தினசரி சந்தை சுமார் 70 ஆண்டு காலம் இருந்ததை கோவில்பட்டி நகராட்சி தினசரி சந்தை என்று பெயர் மாற்றி விடலாம் என்று பகல் கனவு கண்ட கோவில்பட்டி நகர்மன்ற தலைவருக்கும் கோவில்பட்டி நகராட்சி ஆணையாளருக்கும் கேள்விக்கணைகளை எழுப்பி திக்கு முக்காட செய்து மீண்டும் பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் கோவில்பட்டி நகராட்சி தினசரி சந்தை என்று இரவோடு இரவாக பெயர் வைத்துவிட்டு பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகமே இருட்டு என்ற மமதையில் எங்க அப்பன் குதல்குள்ள இல்ல என்ற வரிகளுக்கு இணங்க

(மாமன்னர் பூலித்தேவர் மக்கள் நல இயக்கம் தலைவர் ச .செல்வத்தேவர் ஆகிய நான்)

கோவில்பட்டி நகராட்சிக்கும் தமிழக அரசுக்கும் தேசியத் தலைவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களுக்கும் அவப்பெயர் ஏற்படுத்தி விட்டார் என்று சோற்றுக்குள் முழு பூசணிக்காய் மறைக்க நினைத்தார்கள் அவர்கள் செய்த தவறுகளை நமது வழக்கறிஞர் வெட்ட வெளிச்சமாக்கி அவர்கள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்கள் காவல்துறையும் கவனமாக ஆராய்ந்து முழுக்க முழுக்க நகராட்சி நிர்வாகம் மீது முழு குற்றம் இதை நான் ஒன்னும் செய்ய முடியாது மேல் அதிகாரிகளுக்கு எல்லாம் நான் அனுப்பி வைக்கிறேன் யார் மீது நடவடிக்கை எடுப்பது என்பதை மேல் அதிகாரிகள் ஆராய வேண்டி இருக்கு ஆகையால் இதற்கு தாங்கள் தரப்பு வாதங்களையும் ஆவணங்களையும் என்னிடம் கொடுத்துவிட்டு சென்று வாருங்கள் என்று அனுப்பி வைத்தார்கள் மேற்படி வழக்கு ஆளும் அரசாங்கத்திற்கு அவப்பெயரை உண்டாக்குவதும் தான்தோன்றித்தனமாகஅரசு ஜி ஓ வை மாற்றி அமைப்பதும் தேசியத் தலைவர்களை அவமதிப்பதும் குறைகளை சுட்டிக் காட்டுபவர்களை மிரட்டுவதும் கடும் கண்டனத்துக்குரியது நகர்மன்ற தலைவரும் நகராட்சி ஆணையாளரும் சரியான காரணம் சொல்லவில்லை என்றால்.
அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் வரை தொடர்ந்து போராடுவோம் இப் பிரச்சனையில் தலையிட்டு கேள்விக்கணைகளை எழுப்பியும் கடும் கண்டனக் குரல்களை பதிவு செய்து தமிழக அரசே கோவில்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தினசரி சந்தை பெயர் மாற்றம் செய்யப்படாது என்று அரசு நாளிதழ் விளக்கம் கொடுத்துள்ளது இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய என் அன்பிற்கினிய உறவுகளுக்கும் தேசியத் தலைவர் தெய்வீகத் திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் திரு தொண்டர்களுக்கும் கோடான கோடி நன்றிகள் பல ….
உறவுடன் …
ச.செல்வ தேவர்
நிறுவனத் தலைவர்
மாமன்னர் பூலித்தேவர் மக்கள் நல இயக்கம்.