என் அன்பான கோவில்பட்டி வாழ் பொது மக்களுக்கு அன்பான வேண்டுகோள்….கோவில்பட்டி தற்காலிக பேருந்து நிலையம் நாளை(04.11 – 24 முதல் செயல்படுகிறது என்று நகராட்சி நிர்வாகம் சார்பாக அறிவிப்பு வருகிறது தற்காலிக பேருந்து தளத்தில் சென்று பார்த்தால் எந்ததொரு அடிப்படை வசதிகளும் செய்யவில்லை மாறாக உயிர் பலி வாங்க காத்திருக்கும் கட்டிடங்களாக காட்சியளிக்கிறது அனைத்து சமூக ஆர்வலர்களும் தற்காலிக பேருந்து நிலையத்தை பார்வையிட்டு பொதுமக்களுக்கு உகந்ததா? இல்லையா ? ஆய்வு செய்யும்படி மிகவும் பணிவுடன் வேண்டுகிறேன்….மழை கால நேரங்களில் கூடுதல் பேருந்து நிலையத்தின் கட்டிடங்கள் இடிந்து விழுவதற்கு தயாராக உள்ளது என்பதை தங்களிடம் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்…அவசர கோலத்தில் நகராட்சி நிர்வாகம் செயல்படுவதை சார்ந்த மாமனார் பூலி தேவர் மக்கள் நல இயக்கத்தின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்….பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது.கவனம் மாவட்ட ஆட்சியாளர் அவர்கள் பார்வையிட வேண்டும் என்பதை வேண்டுகிறேன்….
