இந்திய விடுதலை வரலாற்றில் வெள்ளையனே வெளியேறு என முதன் முதலாக 1751 ஆம் ஆண்டில் வீர முழக்கமிட்டவர். இதனால் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் எனக் கருதப்படும் சிப்பாய்க்கலகத்திற்கும் (1857) முன்னோடியாகக் கருதப்படுகிறார். நெற்கட்டாஞ் செவ்வலுக்கு பெருமை என்ன? என்ற நாட்டுப்புற பாடலை கொண்டு இவரின் சிறப்பை அறியலாம்.